தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், ‘JVC-TIMESNOW’ நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
பெரும்பாலான நிறுவனங்கள் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறி வரும் வேளையில், அதற்கு நேர்மாறாக அதிமுக கூட்டணி 128 முதல் 147 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் அரியணையில் அமரும் என்று இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது.
ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 75 முதல் 90 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியைப் பறி கொடுக்கும் என்றும், முதன்முறையாகக் களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 8 முதல் 15 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என இக்கணிப்பு தெரிவித்துள்ளது.
‘VOTE VIBE’ மற்றும் ‘JVC-TIMESNOW’ நிறுவனங்களின் இந்த மாறுபட்ட முடிவுகள், வரும் மே 4-ம் தேதி வெளியாக உள்ள தேர்தல் முடிவுகள் மீது எதிர்பார்ப்பைக் கிடுகிடுக்க வைத்துள்ளது.
