சமூக வலைதளங்களில் அவ்வப்போது வினோதமான உணவுப் பழக்கங்கள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு இளம்பெண் தேநீர் அருந்தி முடித்த கையோடு, அந்த தேநீர் குவளையையும் மிகவும் ரசித்து ருசித்து கடித்துச் சாப்பிடும் வீடியோ இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக மண்ணால் செய்யப்பட்ட குல்லட்களில் தேநீர் அருந்துவது வட இந்தியாவில் பிரபலம்,

ஆனால் இந்த வீடியோவில் உள்ள இளம்பெண், ஒவ்வொரு கடியையும் மிகுந்த ஆனந்தத்துடன் அனுபவித்து உண்பது பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. உண்மையில், இது சாதாரண மண்ணால் செய்யப்பட்ட குல்லட் அல்ல; இது பிஸ்கட் அல்லது சாக்லேட் கொண்டு பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஆகும்.

 

View this post on Instagram

 

A post shared by Priya Mishra (@priya_mishra__017)

“>

மேலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாகவும் இத்தகைய உண்ணக்கூடிய தேநீர் குப்பிகள் தற்போது பல நகரங்களில் பிரபலமடைந்து வருகின்றன. தேநீரின் சுவையோடு அந்த பிஸ்கட் குவளையின் மொறுமொறுப்பும் சேர்வதால், அந்தப் பெண் காட்டும் ரியாக்ஷன்கள் தற்போது நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.