உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் நகராட்சி டேங்கர் லாரி ஒன்றில், எலும்பு போன்ற மர்மப் பொருள் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருவதால், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மக்கள் குடிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட தண்ணீரில் எலும்புத் துண்டு கிடப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
आगरा में नगर पालिका के पानी के टैंकर में मिली हड्डी, वीडियो वायरल होने से मचा हड़कंप
वीडियो में टैंकर के अंदर हड्डी जैसी वस्तु दिखाई दे रही है, जिसके बाद क्षेत्र में दहशत फैल गई। हालांकि प्रशासन ने मामले की जांच शुरू कर दी है।#UttarPradesh #Agra #BoneInWater #WatreTanker pic.twitter.com/AbPgl1qR7O
— NBT Hindi News (@NavbharatTimes) February 24, 2026
“>
இந்தச் சம்பவம் குறித்துப் புகார்கள் எழுந்ததையடுத்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது விலங்குடைய எலும்பா அல்லது வேறேதும் சதிச் செயலா என்ற கோணத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதால் ஆக்ராவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
