தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் காலையிலேயே பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக ஆவின் பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு மூன்று ரூபாய் வரையில் உயர்த்திய நிலையில் இலவச காப்பீடு திட்டம் 5 லட்ச ரூபாயிலிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்றும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
விசிக எம்எல்ஏ ஜோதி மணியின் கோரிக்கையை ஏற்று அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார், ஒரு உதவியாளர் மற்றும் மாதம் பராமரிப்பு தொகையாக 75 ஆயிரம் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட்டதும் அனைத்து எம்எல்ஏக்களும் உற்சாகத்தில் மேசையில் தட்டினர். அதன் பிறகு தமிழக வெற்றிக்கழகத்தின் எம்எல்ஏ சிந்து இந்த கோரிக்கைக்காக நன்றி தெரிவித்த நிலையில் ஒரு பாட்டு பாடி முதல்வர் விஜய்க்கு தன் நன்றியை தெரிவித்தார்.
#WATCH | என்கிட்டயும் 3,4 கார் இருக்கு.. ஆனாலும் CM கொடுத்த காரில் சென்றால்தான்.. – மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ்#SunNews | #TNAssembly | #TVKVijay pic.twitter.com/SvMUmSRtsg
— Sun News (@sunnewstamil) August 19, 2026
அதன் பிறகு மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜு பேசும்போது என்னிடம் 3,4 கார் இருக்கு. ஆனாலும் முதலமைச்சருக்கு கொடுத்த கார் என்றால் அதில் ஒரு தனி பெருமை தான். என்னுடைய தொகுதிக்கு முதலமைச்சர் கொடுத்த காரின் செல்லும்போதே ஒரு கெத்தாக தான் இருக்கும். எனவே நான் முதலமைச்சர் கொடுக்கும் காரில் தான் இனி தொகுதிக்கு செல்வேன் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதற்காக என் மனமார்ந்த நன்றிகள் என்று கூறினார். மேலும் பெண் எம்எல்ஏ சிந்து பாடல் பாடி நன்றி தெரிவித்ததும் கவனத்தை ஈர்த்துள்ளது.
#WATCH | “அனைத்து MLA-வுக்கும் கார்” – பாடல் பாடி நன்றி தெரிவித்த தவெக எம்.எல்.ஏ. சிந்து#SunNews | #TNAssembly | #TVKVijay pic.twitter.com/6uZhzAxojk
— Sun News (@sunnewstamil) August 19, 2026
