
ஒரு நாய் தனக்கு நேர்ந்த அநீதிக்கு பழிவாங்குவது குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு நபர் நாயை பிடித்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அந்நபருடன் பேசிக்கொண்டிருக்கும் மற்றொரு நபர் அந்த நாயை ஒரு செடியின் தண்டால் லேசாக தட்டிக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் நாய் சாதாரணமாக தான் நடந்து கொள்கிறது. எனினும் திடீரென்று அவர் அந்த நாயை தண்டால் வேகமாக அடித்து விடுகிறார். இதன் காரணமாக நாய்க்கு மிகவும் கோபம் வருகிறது. இதையடுத்து நாய் அந்த நபரை பல்வேறு இடங்களில் கடிக்கிறது. நாயிடமிருந்து உயிரை காப்பாற்ற அந்நபர் மேற்கொள்ளும் போராட்டத்தை வீடியோவில் பார்க்க முடிகிறது. இருப்பினும் அவரை காப்பாற்ற இயலவில்லை. இதனால் நாய் அந்நபரை நன்றாக தாக்கி விடுகிறது.
Well done 😂😂 pic.twitter.com/nkFH2W1OB9
— CCTV IDIOTS (@cctvidiots) May 23, 2023