
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாரா டெய்லர், தனது பார்ட்னர் டயானா கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சாரா டெய்லர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது ஜோடி டயானா கர்ப்பமாக உள்ளார். இந்த தகவலை சாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சாரா டெய்லர் தனது பதிவில் பார்ட்ரன் டயானாவிற்கு பயணம் எளிதானது அல்ல என்று கூறினார்.
தனது துணையின் கர்ப்பம் குறித்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்ட சாராவின் ட்விட்டர் பதிவில், “தாயாக வேண்டும் என்பது எனது துணையின் நீண்ட நாள் கனவு; ஆசை. இந்தப் பயணம் எளிதானது அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் டயானா கைவிடவில்லை. அவள் ஒரு சிறந்த அம்மாவாக இருப்பாள் என்று எனக்குத் தெரியும். டயானாவின் சகாவாக இருப்பதில் பெருமை. இன்னும் 19 வாரங்கள்..எங்கள் வாழ்க்கை மாறும். என்று குறிப்பிட்டு ஆர்வத்துடன் எழுதியிருக்கிறார்.

மனநலக் காரணங்களுக்காக சாரா டெய்லர் 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 126 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 சதங்கள் மற்றும் 20 அரைசதங்கள் அடித்துள்ளார்.அவர் 90 டி20 போட்டிகளில் 2177 ரன்கள் எடுத்துள்ளார். இதனுடன், அவர் 10 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இதில் அவர் 330 ரன்கள் எடுத்தார். 2017ல் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது.இந்த அணியில் 33 வயதான சாரா டெய்லர் இடம்பெற்றிருந்தார்.
2019 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சாரா தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். தன்பாலின தம்பதியான சாரா டெய்லர் – டெய்லர் இருவரும் தங்களது முதல் குழந்தையை வரவேற்க உள்ளனர். இதற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..
ஆடம் கில்கிறிஸ்ட்டின் வாழ்த்துக்கள்:
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சாரா டெய்லர்-டயானா இணை பெற்றோர் ஆவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.“வாழ்த்துக்கள். ஒரு அற்புதமான பயணம் இருவருக்கும் காத்திருக்கிறது என்று கில்கிஸ்ட் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த மகிழ்ச்சியான செய்திக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். சாரா இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி, உங்கள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
Congratulations legend. A wonderful journey awaits. ❤️👏
— Adam Gilchrist (@gilly381) February 22, 2023
மின்னல் வேக விக்கெட் கீப்பிங் :
பெண்கள் கிரிக்கெட்டில், சிறந்த வீராங்கனையாக அடையாளம் காணப்பட்ட சாரா டெய்லர், அவரது மின்னல் வேக விக்கெட் கீப்பிங்கிற்காக பரவலாக கொண்டாடப்படுகிறார்.அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் போது, முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்டால் “இந்த 2018 ஆம் ஆண்டின் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பர்” என்று பாராட்டப்பட்டார். அவர் 2019 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சாரா மற்றும் டயானாவுக்கு குழந்தை பிறந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..
Being a mother has always been my partner's dream. The journey hasn't been an easy one but Diana has never given up. I know she will be the best mum and I'm so happy to be a part of it x
19 weeks to go and life will be very different ! 🤍🌈 pic.twitter.com/9bvwK1Yf1e
— Sarah Taylor (@Sarah_Taylor30) February 21, 2023