
உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது எழுபதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்திய திரை உலகின் வாயிற்கதவுகளை திறக்கின்ற கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு பகுத்தறிவு கருத்துக்களை பரப்புரை செய்யும் அருமை நண்பர் கமல்ஹாசனின் தொண்டு சிறக்க விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.