
பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், கொள்கை தலைவர்கள் பற்றி விளக்கமாக பேசி முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். வருகிற 2026- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது. இதற்கான பணிகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
இது ஒரு புறம் இருந்தாலும் மற்றொருபுறம் தனது 69-ஆவது படத்திலும் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார் இதுதான் விஜயின் கடைசி படம். அதன்பிறகு முழு நேரமாக அரசியல் ஈடுபட போகிறார். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவிடம் விஜயின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைரமுத்து விஜயின் அரசியல் வருகை குறித்து பேசி நட்பை கெடுக்க விரும்பவில்லை. உண்மையை சொல்லாமல் பொய்யனாக இருக்க விருப்பமில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.