உலகநாயகன் கமல்ஹாசனின் வாரிசு சுருதிஹாசன். இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் தமிழில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் தற்போது தமிழில் சுருதிக்கு பட வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிகை ஸ்ருதிஹாசன் பிசியான நடிகையாக வலம் வருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருந்த வால்டர் வீரைய்யா மற்றும் வீரசிம்ஹா ரெட்டி திரைப்படங்கள் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகை ஸ்ருதி தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வால்டர் வீரய்யா படத்தின் ப்ரோமோஷன் ஹைதராபாத்தில் நடைபெற்ற போது அதில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துகொள்ளாததால் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக இணையதளத்தில் தீயாக தகவல்கள் பரவியது. இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டை நடிகை சுருதிஹாசன் பகிர்ந்து எனக்கு வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டதால் தான் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும், மனநலம் பாதிக்கப்பட்டதாக பரவும் வதந்தி ஒரு நல்ல முயற்சி என்றும் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் நடிகை ஸ்ருதிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.