ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அவதார் 2 திரைப்படம் உலக அளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் திரைப்படத்தை தற்போது 3d மற்றும் 4k தொழில்நுட்பத்தில் ஹை ஃப்ரேம் ரேட்டில் ரீ மாஸ்டர் செய்து மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். இதனால் டைட்டானிக் திரைப்படத்தின் காட்சி ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தில் உருவான டைட்டானிக் படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் லியானர்டோ டிகாப்ரியா மற்றும் கேட் வின்ஸ்லெட் நடிப்பில் வெளியான டைட்டானிக் திரைப்படம் உலக அளவில் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. இந்த படம் ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் என பல விருதுகளை குவித்த நிலையில் டைட்டானிக் படத்தின் வசூலை எந்த படங்களாலும் முறியடிக்க முடியாமல் இருந்தது. அதன் பிறகு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படமே டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. மேலும் நவீன தொழில்நுட்பத்தில் டைட்டானிக் திரைப்படம் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது அவதார் 2 திரைப்படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதால் அதன் வசூல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக டைட்டானிக் திரைப்படத்தை பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.