குஜராத்தில் உள்ள சூரத் நகரைச் சேர்ந்த 21 வயதான பிரதீக் படேல் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதை காரணமாகக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகராகும் ஆசையுடன், ஜிம்மில் பயிற்சி எடுத்த வீடியோக்களை தினமும் ரீல்ஸ் வடிவில் பதிவிட்டு வந்த பிரதீக்  இதுவரை 300-க்கும் மேற்பட்ட ரீல்ஸ் பதிவிட்டிருந்தாலும், அவரது பின்தொடர்வோர் எண்ணிக்கை 7,923-ஆக மட்டுமே இருந்தது.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் மற்றவர்களுக்கு அதிகமான பின்தொடர்வோர் இருக்க, அதே அளவான வரவேற்பு இல்லாததால் மனமுடைந்த பிரதீக், நீண்ட நாட்களாக மன அழுத்தத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர்.

இதனால் கடந்த செவ்வாய் கிழமை விஷம் குடித்து கிராமத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மயங்கிய நிலையில் கிடைத்தார். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.