சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரன், எல்‌.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது அண்ணாமலை பேசியதாவது, அண்ணன் டிடிவி தினகரன் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய நிலையில் நேற்று அவர் சென்றார். அவரின் இதயம் நல்ல இதயம் என்று அனைவருக்கும் தெரிந்த நிலையில் அதனை டாக்டரும் கூறிவிட்டார். நீங்கள் ஒரு அற்புதமான மனிதர் என்று பழகி பார்த்தால் அனைவருக்கும் தெரியும்.

நிச்சயம் நீங்கள் நினைக்கும் மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். அதன் பிறகு நான் சுதந்திரமாக பேசுவேன். இதுவரை எனக்கு பொறுப்பு என்ற கட்டுப்பாடு இருந்த நிலையில் இனி அண்ணாமலையாக சுதந்திரமாக அரசியலில் ஈடுபடுவேன். ஒரு அரசியல்வாதிக்கு அடித்து ஆட வேண்டிய பாக்ஸிங் கலை தேவைப்படுகிறது. அதனால் இனி என்னுடைய பேச்சு ஸ்டைலை மாற்றி விடுவேன்.

பக்குவமாக பேசுவதற்கு நயினார் நாகேந்திரன் இருக்கிறார். நீங்கள் என்னிடம் கூட்டணி பற்றி ஏதாவது சொன்னீர்கள் என்றால் நான் அவரை கைகாட்டி விடுவேன். அவர் தடுத்து ஆடும் ஆட்டத்தை பார்ப்பார். இனி எனக்கு சிக்ஸ் அடிப்பது மட்டும்தான் வேலை என்றார்.

மேலும் புதிய பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அண்ணாமலை தேசிய அரசியலில் ஈடுபட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.