
குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் மயூர் தாராபரா. இவரது குடும்பத்தினர் வைர நகைகளை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். இவர் குடும்பத்தாரின் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மயூர் தாராபரா தனது இடது கையில் நான்கு விரல்கள் வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது தனது நண்பரின் வீட்டிற்கு சென்றபோது தான் மயங்கி விழுந்ததாகவும் கண்விழித்து பார்த்த போது தனது கையில் நான்கு விரல்கள் காணாமல் போயிருந்ததும் தீய நடவடிக்கைகளுக்காக விரல்கள் வெட்டப்பட்டு இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினரின் கிடுக்கு பிடி விசாரணையில் மயூர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
அதாவது தனது குடும்பத்தினரின் வைர நகை நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிய விரும்பாத மயூர் தாராபரா தனது விரல்களை துண்டாக வெட்டியுள்ளார். கை விரல்கள் இல்லை என்றால் கணினியில் பணி புரிய முடியாது. அதனால் தான் வேலை பார்க்க வேண்டாம் என்று மயூர் நினைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.