இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி, தொழிற்சாலைகளில் இயந்திரங்களுடன் பணிபுரியும் போது கவனமாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது, இயந்திரத்தின் உள்ளே தனது கையை விட்டு ஏதோ செய்கிறார் அப்போது அவரது கை இயந்திரத்தில் சிக்கிக் கொள்கிறது. இந்தக் காட்சி பார்ப்பவர்களை பதற வைக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by @adams_darkness

சிறிது நேரத்தில் அந்த நபர் தனது கையை வெளியே எடுத்துவிட்டார், ஆனால் அவரது கையின் மணிக்கட்டு வரை துண்டாகி தொங்குவது காணொளியில் தெரிகிறது. பின்னர் காயமடைந்த கையுடன் அவர் அவசரமாக அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.