தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது துணை முதல்வர் உதயநிதி நான் பேசுவதில்லை என்று எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால் நான் பேசும்போதெல்லாம் அவர் அவையில் இருப்பதில்லை. நான் கடந்த முறை என்னுடைய காரில் தவறாக ஏற நினைத்தவர்களை பாதை மாறி செல்ல வேண்டாம் என்று கூறினேன். அப்போது எங்க காரு தப்பா போகாது என்று கூறினார்கள். ஆனால் இன்று டெல்லி சென்று பல கார்களில் பாதை மாறி சென்றுள்ளனர். பொதுவாக சிலர் பேப்பரில் எழுத தொடங்கும் போது உ போட்டு எழுதுவார்கள்.

ஆனால் நம்முடைய முதல்வர் இந்த பட்ஜெட்டை ரூ. தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டை பாசிஸ்டுகள் எத்தனை ரூல்ஸ் போட்டு அலற வைத்தாலும் ஒரே ஒரு ரூ போட்டு அவர்கள் அனைவரையும் நம்முடைய முதலமைச்சர் அலற விட்டுள்ளார். நம்முடைய முதல்வர் ஹிந்தி திணிப்பை மட்டும் இன்றி எந்த ஒரு திணிப்பையும் அனுமதிக்க மாட்டார். மேலும் சென்னையில் ஃபார்முலா போர் கார் பந்தயத்தை நடத்த எத்தனையோ எதிர்ப்புகள் வந்த போதிலும் அத்தனையும் மீறி பந்தயத்தை சிறப்பாக நடத்தி முடித்ததோடு அதற்கு பாராட்டுகளும் கிடைத்தது என்று கூறினார்