இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே ஏதாவது ஒரு வித்தியாசமான நிகழ்வு கட்டாயம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் மாப்பிள்ளை மற்றும் பெண் பார்க்கும் படலங்கள் கூட வித்தியாசமான முறையில் நிகழ்வது வழக்கமாகிவிட்டது. அவ்வகையில் தற்போது ரஜினி நடிப்பில் வெளியான எஜமான் படம் பார்த்துவிட்டு பெண் ரசிகை ஒருவர் எழுதிய கடிதத்தை தற்போது ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த கடிதத்தில், எஜமான் வானவராயன் போல ஆண் இருந்தால் சொல்லுங்கள் உடனே நான் கழுத்தை நீட்டுகிறேன்”என குறிப்பிட்டுள்ளார். கடந்த 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான எஜமான் திரைப்படத்தில் ரஜினி மற்றும் மீனா ஆகியோர் நடித்திருப்பார். அந்தத் திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் தாண்டியதை முன்னிட்டு இந்த கடிதத்தை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.