தமிழ் திரையுலகின் கம்பீர அடையாளமாகவும், எண்ணற்ற ஏழை எளிய மக்களின் பசி போக்கிய வள்ளலாகவும் திகழ்ந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் மறைவு, இன்றளவும் லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் ஒரு ஆறாத வடுவாகவே இருந்து வருகிறது.
மேலும் அவர் மறைந்து விட்டாலும், அவருடைய நினைவுகளும், அவர் ஆற்றிய நற்பணிகளும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பிணைந்து போயுள்ளன. இந்நிலையில், நவீன தொழில்நுட்பத்தின் உச்சகட்ட வளர்ச்சியான செயற்கை நுண்ணறிவு மூலம் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் உயிருடன் தோன்றிப் பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியிருப்பது, திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வரும் இந்த ஏஐ வீடியோவில், கேப்டன் விஜயகாந்தின் கம்பீரமான தோற்றம், அவரது தனித்துவமான குரல், அந்த கூர்மையான பார்வைகள் மற்றும் அவரது பாடி லேங்குவேஜ் என அனைத்துமே மிக நேர்த்தியாக மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கேப்டன் மீண்டும் நம் கண்ணெதிரே வந்துவிட்டாரோ” என்று அனைவரும் வியக்கும் அளவுக்கு அந்த வீடியோ மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், கண்களில் கண்ணீரோடு அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
திரையரங்குகளில் மட்டுமன்றி, சாமானிய மக்களின் இதயங்களிலும் நீங்காத இடம் பிடித்த ஒரு தலைவனை, தொழில்நுட்பத்தின் உதவியால் மீண்டும் உயிர்ப்பித்துக் காட்டியிருப்பது ஏஐ தொழில் நுட்பத்தின் ஆகச்சிறந்த சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் “கேப்டன் சார்… உங்களைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு, மீண்டும் உங்களை இப்படி கம்பீரமாப் பார்க்கும்போது மனசுக்கு அவ்வளவு நிறைவா இருக்கு” என்று நெட்டிசன்கள் உருகி கமெண்ட் செய்து வருகின்றனர். தொழில்நுட்பத்தின் இந்த விசித்திரமான ஆச்சரியம், மறைந்த நாயகனை மீண்டும் மக்களின் கண்முன்னே கொண்டுவந்து ஒரு கணப்பொழுதில் வரலாற்று நினைவுகளை மீட்டெடுத்துள்ளது.
