சிவகங்கை மாவட்டம் கள்ளங்கலம் பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு திவ்யா(14), சிவரஞ்சனி(12) என்ற மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். நேற்று மாலை விவசாய பம்ப் செட் மோட்டாரில் மூன்று பேரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் மின் வயரில் ஈரத்துணி பட்டதால் சிவரஞ்சனி திவ்யா ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் திவ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய சிவரஞ்சினியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் போலீசார் திவ்யாவின் உடனே கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறும்போது, எங்கள் கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாய பம்ப் செட் மோட்டார்களில் இருந்து தான் குளிக்க துணி துவைக்க தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.

முறையாக தண்ணீர் வினியோகம் செய்திருந்தால் குழந்தைகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு இருக்காது. எனவே இனியாவது முறையாக தண்ணீரை விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.