ஆசியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாக விளங்குவது YUNTAI நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி சீனாவில் உள்ளது. இந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குழாயிலிருந்து நீர் கொட்டுவதை ஒரு மலையற்ற வீரர் பார்த்துள்ளார். அவர் உடனடியாக அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த சுற்றுலா நிர்வாகம் கோடை காலத்தில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாறக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.