
X தளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு பிரதமர் மோடி X தளத்தில் புதிதாக கணக்கை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு வரை 10 கோடி ஃபாலோவர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
X தளத்தில் அதிகம் பின் தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் தற்போது இடம் பிடித்துள்ளார். இந்திய அரசியல் தலைவர்களில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி 26.4 மில்லியன் பாலோவர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.