எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இருந்து தெற்கே அமைந்துள்ள மின்யா மாகாணத்தில் பாலைவனம் அமைந்துள்ளது. அந்த பாலைவனத்தின் நடுவே உள்ள சாலையில் பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அதிகாலை நேரம் என்பதால் குளிர் காற்றுடன் மூடுபனி உருவானது.

இந்த சமயத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் இருந்து விலகி பாலைவனத்திற்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. இந்த பேருந்தில் பயணித்த 25 பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.