இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி  தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.  இந்நிலையில் தினமும் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் இளம் பருவத்தினர் (10-19 வயது) மனநலப் பிரச்னைகளை எதிர்கொள்வதாக பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஹனியுங் பல்கலைக்கழக மருத்துவ மையம் பதின்வயதினர்களின் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மற்றும் அவர்களின் உடல்நிலையை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியாகியுள்ளது. ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கும் மேலாக உங்கள் போனை பார்த்தால் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் வரும் என கூறப்பட்டுள்ளது.