கல்வி சார்ந்த தொழில்நுட்ப (எடுடெக்) நிறுவனமான பைஜஸ் மீண்டும் தனது ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் கிட்டத்தட்ட 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பைஜூஸ், மேலும் 1,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது. நிதிச்சுமையை குறைக்க மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை துறைகளில் இருந்து ஆட்குறைப்பு செய்யப்படுவது தெரிந்ததே.

இதற்கிடையில், மெட்டா, அமேசான், ட்விட்டர் போன்ற மாபெரும் நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. ஐடி, ஆட்டோ மொபைல் துறை நிறுவனங்கள் பலவும் சிறய அளவிலான பணிநீக்கம் செய்து வருகின்றன.