இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் கேம்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமையாகி வருகின்றனர். ஒருசிலர் இந்த ஆன்லைன் விளையாட்டுக்களால் பணத்தை கூட இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையான சிறுமி தனது தாயின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.52 லட்சத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. 13 வயது சிறுமி ஒருவர் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகியுள்ளார்.

தினமும் தனது போனில் பே-டு-ப்ளே என்ற கேம்களை விளையாடியதன் மூலம் தனது தாயின் வங்கிக் கணக்கில் 449,500 யுவான் (இந்திய மதிப்பில் 52.19 லட்சம்) இழந்துள்ளார். தொடர்ந்து தாய் தனது வங்கிக் கணக்கைச் சரிபார்த்ததில் 5 ரூபாய் மட்டுமே இருந்தது கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.