பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற வேண்டுமெனில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. மத்திய பணியாளர் அமைச்சகம்(DPPW) இதுகுறித்து அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வேண்டுமானால், அதற்குரிய தேர்வை செய்யவேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இது பற்றி கலந்தாலோசித்த மத்திய அரசு, ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு(OPS) மாறுவதற்கான விருப்பத்தை பெற வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. தேசிய ஓய்வூதிய முறை நடைமுறைக்கு வந்த நாளான டிசம்பர் 22, 2003-க்கு முன் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்த ஊழியர்களுக்கு மட்டும் இது பொருந்தும். இருப்பினும் இதற்கு எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்க இயலாது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட்-31 ஆகும்.