குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்மித் சேஞ்சலா, பி.காம் முடித்துவிட்டு Upsc தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்த  இளைஞர் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மொபைலில் கையால் டைப் செய்யும் போது வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதன்காரணமாக கொரோனா லாக்டவுனின் போது மூக்கின் நுனியில் டைப்பிங் செய்ய ஆரம்பித்தார்.

முதலில் சற்று கடினமாக இருந்தாலும், இப்போது வேகமாக டைப்பிங் செய்கிறார். தற்போது மூக்கு நுனியில், ஒரு நிமிடத்திற்கு 151 எழுத்துகள் 36 வார்த்தைகளை டைப் செய்து India Book of Recordsல் இடம் பிடித்தார். இவருடைய இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.