வரும் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. கடந்த ஒரு வாரமாக தினமும் 15,000 வாகனங்கள் ஊட்டிக்கு வந்து சென்றன. இதனால் ஊட்டி – குன்னூர் -மேட்டுப்பாளையம் ஊட்டி நகர் உள்பட பல முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோடை சீசனையொட்டி நள்ளிரவு 12 மணி முதல் மே மாதம் இறுதிவரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர்-பரலியார் சாலை, கோத்தகிரி சலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் உதகை நகருக்குள் செல்ல தடை விதிப்பு. உதகை-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை, உதகை-கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.