கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக கடந்த  சில நாட்களாகவே தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

அந்தவகையில்தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.