சென்னையில் கேரளா மீடியா அகாடமி மற்றும் சென்னை மலையாளி சங்கத்தின் ஊடக சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும். நாம் ஒரே மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள், திராவிட குடும்பத்தை சேர்ந்தவர்கள். சமத்துவத்திற்கு எதிராக உள்ளவர்களுக்கு திராவிடம் என்ற சொல் எரிச்சலாக இருக்கிறது. தற்போது பத்திரிக்கை துறையில் பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.