அமெரிக்காவில் பல இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனை மக்களே சமாளிக்க முடியாத நிலையில் விலங்குகள் மட்டும் விதிவிலக்கல்ல. இந்நிலையில் கலிஃபோர்னியா பகுதியில் உள்ள மலைப்பகுதி ஒன்றில் அமைந்திருக்கும் வீட்டின் பின்பகுதியில் நீச்சல் குளம் ஒன்று இருந்துள்ளது. அங்கு தற்போது வெயில் தாங்க முடியாத அளவிற்கு அடித்து வருவதால் இதை தாங்க முடியாத கரடி ஒன்று என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றி திரிந்துள்ளது.

அப்போது திடீரென அந்த நீச்சல் குளத்தை பார்த்த அந்த கரடி, அப்பாடா இளைப்பாற ஒரு இடம் கிடைத்தது என்று அங்கேயே டேரா போட்டு விட்டது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Burbank Police Department (@burbankpolice)