இந்தியாவில் தற்பொழுது பண்டிகை கால சிறப்பு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதில் நோ காஸ்ட் இஎம்ஐ என்ற மோகம் இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான  ரூபாய்களை இழக்கிறார்கள்.

நோ காஸ்ட் இஎம்ஐ என்றால் எம்ஆர்பி விலையில் சில தள்ளுபடி பெறலாம். ஆனால் எம்ஆர்பி மட்டுமே கடைசியாக கருதப்படும். ஒரு லேப்டாப்பின் விலை 50 ஆயிரம் ரூபாய் என்றால் நோ காஸ்ட் இஎம்ஐயில் உண்மையான விலையை அதாவது ஐம்பதாயிரம் மட்டுமே இஎம்ஐ செய்யப்படும். அதே சமயம் லோ காஸ்ட் இஎம்ஐ இல்லாமல் 50 ஆயிரத்துக்கு 2000  தள்ளுபடி பெற முடியும்.