பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க கவுண்டரில் காத்து கிடைக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்நிலையில் இந்நிலையில் ரயில்வே ஜெனரல் டிக்கெட்டுகளுக்காக கவுன்டரில் காத்திருக்க தேவையில்லை என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள UTS செயலி மூலம் உங்கள் போனில் ஜெனரல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஜெனரல் டிக்கெட்டுகளுடன், பிளாட்பார்ம் மற்றும் சீசன் டிக்கெட்டுகளையும் இந்த செயலியில் இருந்து பெறலாம்.

ஆனால் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சற்று தொலைவில் இருக்கும்போது முன்பதிவு செய்யலாம். மேலும், நடைமேடையில் அல்லது ரயிலில் இருக்கும்போது செய்ய முடியாது என தகவல் தெரிவித்துள்ளது.