பண்டிகை காலங்களை ஒட்டி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் சலுகைகள் கிடைக்கும். அதே நேரத்தில் சில ஆபத்துகளும் இருக்கின்றன. விற்பனை என்ற பெயரில் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடந்து வருவதாக  புகார்கள் எழுந்து வருகிறது. எனவே ஷாப்பிங் செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து பார்க்கலாம். ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பொழுது பொருளின் அசல் விலைக்கு பதிலாக இஎம்ஐ விலை காட்டப்படும். அப்போதுதான் விலை குறைவாக இருக்கிறது என்று வாங்குவார்கள்.

இதனால் குழப்பம் ஏற்படலாம். இதனால் பொருளை வாங்க செய்ய முயற்சிப்பார்கள். சலுகை என்ற பெயரில் பொருளின் எம்ஆர்பி விலையை விட அதிக விலையை காட்டி அதில் சில தள்ளுபடி சலுகை வழங்குவதாக கூறி அதிக விலைக்கு விற்று விடுவார்கள் .எனவே  பொருளுடைய உண்மையான விலை என்ன? என்று தெரிந்து கொண்டு அதன் பிறகு வாங்குவது நல்லது. பிரைஸ் லாக் என்றால் கொஞ்சம் பணம் செலுத்தி பொருளை புக்கிங் செய்வது.

ஆனால் விலையில்  லாக் செய்யப்படும் பொருட்கள் விற்பனையாகாமல் போகும் அளவுக்கு சிக்கல் ஏற்படும். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருக்கிறது .ஆனால் இழப்பு என்பது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. அனைத்து சலுகைகளும் போலியானவை என்று அர்த்தம் கிடையாது. அதேநேரம் வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும் போது இதனை மனதில் கொள்ள வேண்டும்.