இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரிடமிருந்து சைபர் குற்றவாளிகள் 3.7 கோடி ரூபாய் பறித்துள்ளனர். சாப்ட்வேர் இன்ஜினியருக்கு சிபிஐ மற்றும் மும்பை போலீஸ் சீருடையில் வீடியோ கால் செய்த குற்றவாளிகள் பண மோசடி வழக்கில் அவரை கைது செய்யப் போவதாகவும் கைது செய்யாமல் இருக்க பணம் தரும்படியும் மிரட்டி உள்ளனர்.

இதனால் பயந்து போன அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் 3.7 கோடியை வங்கி  கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு தான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்த அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் அது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்ற வருகிறது. எனவே இது போன்ற போலி வீடியோ கால்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் மக்களுக்கு சைக்கர்கள் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.