பொதுவாக போட்டித்தேர்வுகளின்போது ஒருசிலர் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் போட்டித் தேர்வுகளில் ஆள்மாறாட்டம், முறைகேடுகளை தடுக்க நாடாளுமன்றத்தில் வரும் திங்களன்று புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டத்தின் நோக்கம், திட்டமிட்டு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோரை தண்டிப்பதே என கூறப்பட்டுள்ளது.