இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்து கிடப்பது பிரச்சினையாக இருந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாஸ்டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் இந்த கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்பதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.  இந்நிலையில் வாகன ஓட்டிகள் தங்கள் FASTag கார்டுகளில் KYC-ஐ புதுப்பிக்க மேலும் ஒரு மாதத்திற்கு அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

KYC முழுமையடையாத FASTag கார்டுகள் ஜன.31க்கு பிறகு வங்கிகளால் செயலிழக்க செய்யப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், பிப் 29 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. KYCல் ஏதேனும் மாற்றம் இருந்தால் ihmcl.co.inல் லைசன்ஸ், பான், ஆதார் ஆகியவற்றை சமர்ப்பித்து புதுப்பிக்க வேண்டும்