திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு உள்ளூர் நபர்களிடம் பத்து ரூபாயும் வட மாநிலத்தவர்கள் இடம் 20 ரூபாயும் கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏலா ஊரில் உள்ள ஒரு கடையில் உள்ளூர் மது பிரியர்களிடம் பாட்டிலுக்கு பத்து ரூபாயும் வடமாநிலத்தவர்களுக்கு 20 ரூபாயும் கூடுதலாக கேட்டு வாங்குகிறார்கள். உள்ளூர் தொழிலாளி ஒருவர் எதற்காக பத்து ரூபாய் கூடுதலாக எடுத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு 20 ரூபாய்க்கு பதில் பத்து ரூபாய் மட்டுமே எடுத்து இருப்பதாக கூறியுள்ளனர்.

அவர் பேசியதை தொழிலாளி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அமைச்சர் முத்துசாமி கூடுதல் பணம் வாங்கக்கூடாது என உத்தரவிட்ட நிலையில் இது போன்ற விற்பனையாளர்கள் சிலர் மதுபிரியர்களை கோப்பமடைய செய்கின்றனர்.