மைசூர் டவுன் கேத்தமாறன்ஹள்ளி பகுதியை சேர்ந்த பிரேமா என்பவருக்கும் ஸ்ரீராம்புராவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பிரேமா கணவரின் நண்பர் ராஜேஷ் அம்பாபுரா கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேஷ் நஞ்சன் கூட்டில் உள்ள தன்னுடைய நண்பன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கும் நண்பரின் மனைவியான பிரேமாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனிடையே பிரேமாவின் கணவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் இவர்களின் நெருக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரேமாவுடன் உல்லாசமாக இருக்கும்போது அதனை ராஜேஷ் செல்போனில் வீடியோ எடுத்து வைத்து மிரட்டியுள்ளார். கள்ள காதல் ஜோடி இடையே இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பிரேமா அவரிடம் இருந்து விளக்க தொடங்கினார். இந்த நிலையில் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக ராஜேஷ் பிரேமாவை மிரட்டிய நிலையில் ஆத்திரமடைந்த பிரேமா அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

இது பற்றிய அவர் தனது சகோதரரிடம் கூறிய நிலையில் நேற்று முன்தினம் பிரேமா ராஜேஷை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் அப்போது பிரேமாவின் சகோதரர் மற்றும் பிரேமா இருவரும் சேர்ந்து ராஜேசை சரமாரியாக தாக்கினார். மேலும் கீழே கிடந்த கல்லை எடுத்து அவருடைய தலையில் போட்டுள்ளனர். இதில் ராஜேஷ் உயிரிழந்த நிலையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.