இந்த உலகில் வைரம் மற்றும் தங்கம் ஆகிய பொருள்கள் அதிக விலக்கி விற்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவற்றையும் தாண்டி உயிருள்ள அரிய பொருள்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது மீன்கள் அதிக விலைக்கு விற்பனையாகிறது.

அதிர்ஷ்ட மீன் அரோவனா:

61 செண்டி மீட்டர் நீளம் வரை வளரும் இந்த மீன் அதிகபட்சமாக நான்கு லட்சம் டாலர்கள் வரை விற்பனை ஆகிறது. இது ஆஸ்டியோகிலாசிடே என்ற குடும்பத்தை சேர்ந்ததால் வாயில் முட்டைகளை வைத்து பாதுகாக்கும். மேற்பரப்பில் தாவி செல்லும் பூச்சிகளை உண்பதால் இதற்கு நீர் குரங்கு என்ற பெயரும் உள்ளது.

நன்னீர் போல்கா:

தைவானில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள போல்கா என்ற மீனின் விலை ஒரு லட்சம் டாலர்கள் என்றால் நம்மை வாய்ப் பிளக்க வைக்க செய்யும். 12.7 சென்டிமீட்டர் வளரும் வட்ட வடிவிலான இந்த மீன் இனப்பெருக்கத்தின் போது யு வடிவத்தில் இருக்கும். இதன் மீது மிக அழகாக சிறுசிறு புள்ளிகள் இருக்கும்.

பெப்பர்மின்ட் ஏஞ்சல்:

30000 டாலர் விலையுள்ள ஏழு மீட்டர் நீளம் வரை வளரும் இந்த மீன் ஆழ்கடலில் 120 மீட்டர் ஆழத்தில் காணப்படுவதால் நீச்சல் அடிப்பவர்கள் இதனை எளிதில் பார்க்கலாம் . அறிய மீன்களை சேகரிப்போர் இந்த மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.

மாஸ்க்டு ஏஞ்சல் பிஷ்:

இந்த வகை மீன்கள் 20,000 டாலர் விலை உள்ளது. 21 சென்டிமீட்டர் நீளம் வளரும் இந்த மீனை பெரும்பாலும் ஹவாய் தீவுகளின் பவளப்பாறையில் ஏறத்தாழ 300 அடி ஆழத்தில் காண முடியும்.

பிளேடுபின் பேஸ்லெட்:

கருவியை கடல் பகுதியில் காணப்படும் இந்த வகை மீன் மூன்று சென்டிமீட்டர் வளரும். இதன் விலை பத்தாயிரம் டாலர்கள் ஆகும். இது ஆழ்கடலில் 150 மீட்டர் ஆழத்தில் இருப்பதால் இதனை பிடிப்பது மிகவும் கடினம்.