உலகின் மிகப்பெரிய முள்ளங்கியை அறுவடை செய்த ஜப்பானை சேர்ந்த உரம் தயாரிப்பு நிறுவனத்திற்கு கின்னஸ் சாதனை சான்றை வழங்கிய சிறப்பிக்கப்பட்டுள்ளது. சராசரி முள்ளங்கியை பயிரிட மூன்று மாதங்கள் ஆகும். ஆனால் குறிப்பிட்ட இந்த முள்ளங்கியை அறுவடை செய்ய 6 மாத காலம் ஆகி உள்ளது. இதன் ஒட்டுமொத்த எடை 45 கிலோவாகும். முள்ளங்கியின் அகலம் 113 சென்டிமீட்டர். பூமியில் 80 சென்டிமீட்டர் ஆழம் வேர் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உலகிலேயே மிகப்பெரிய இந்த முள்ளங்கியை அறுவடை செய்த ஜப்பான் சேர்ந்த உரம் தயாரிப்பு நிறுவனத்திற்கு கின்னஸ் சாதனை சான்று வழங்கப்பட்டுள்ளது.