
உலகில் 100 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட சூப்பர் பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி உட்பட 15 பேர் இடம் பிடித்துள்ளனர். அதன்படி இந்த பட்டியலில் முதலிடத்தில் எல்விஎம்எச் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்டு முதலிடத்தை பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 222 பில்லியன் டாலர் ஆகும். இதன் பிறகு 208 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் amazon நிறுவனர் ஜெப் பிசோஸ் 2-ம் இடத்திலும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 187 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3-ம் இடத்திலும் இருக்கிறார்கள்.
அதன்பிறகு மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர் பெர்க் 179 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4-ம் இடத்திலும், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 150 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 5-ம் இடத்திலும் இருக்கிறார்கள். மேலும் ரிலையன்ஸ் குடும்பத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 11 வது இடத்தை பிடித்துள்ள நிலையில், கடந்த முறை பட்டியலில் இருந்து வெளியேறிய கௌதம் அதானி மீண்டும் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் கௌதம் அதானி 12ஆம் இடத்தில் இருக்கிறார்.