நம்மில் பலரும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகளவில் 200 கோடி மக்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்ல போதிய அளவு ரத்த சிவப்பணுக்கள் இல்லாதபோது ரத்த சோகை ஏற்படுகிறது.

204 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் இரும்புச் சத்து குறைபாடே ரத்த சிவப்பணுக்களின் பற்றாக்குறைக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.