
பொதுவாக ஸ்வீட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்றாக இருக்கிறது. இனிப்பு வகைகளில் லட்டு, ரசகுல்லா, குலாப் ஜாமுன், ஜாங்கிரி, மைசூர் பாக் என இப்படி சொல்லி கொண்டே போகலாம். அதில் முக்கியமாக மைசூர் பாக். இதில் இரண்டு வகைகள் இருக்கிறது. ஒன்று மென்மையாக அதிகமாக நெய் சேர்க்கப்பட்டு வாயில் கரையும் சுவையுடன் இருக்கும்.
மற்றொன்று பாரம்பரிய முறையில் செய்யப்படும் சற்று கடினமாக சிறு சிறு ஓட்டைகள் உடன் இருக்கக்கூடிய மைசூர்பாக். இந்நிலையில் உலக அளவில் மைசூர் பாக் ஸ்வீட் 14வது இடத்தை பிடித்துள்ளது. டேஸ்ட் அட்லஸ் என்ற இதழ் சமீபத்தில் 50 சிறந்த சாலையோரம் இனிப்புகள் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த மைசூர் பாக் உலகளவில் 14வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் குல்பி 18 ஆவது இடத்தில் குல்பி பலூடா 32 வது இடத்தையும் பிடித்துள்ளது.