தமிழகத்தில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெற்றவுடன் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கின்றனர். அதில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்போருக்கு ஆங்கிலம் மட்டுமல்லாமல் வேறு சில வெளிநாட்டு மொழிகளும் அவசியம் தேவைப்படுகிறது. அதன்படி தமிழக மாணவர்களில் பலர் ஜெர்மன், ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பணிக்கு செல்வதால் அந்த நாட்டின் மொழியை கற்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனை தழுவி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜெர்மன், ஜப்பான் மற்றும் பிரஞ்சு மொழிகளுக்கான சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டரில் 60 மணி நேரம் வீதம் இரண்டு செமஸ்டருக்கு பாடங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை அறிய www.annauniv.edu என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.