தினமும் கொச்சி மெட்ரோவில் பயணம் செய்பவர்கள் சலுகைகள் பெறும் விதமாக “கொச்சி ஒன்” என்ற அட்டை  பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதன் மூலமாக டிக்கெட் கட்டணத்தை விட குறைவான கட்டணத்தில் பயணம் செய்யலாம். அதுமட்டுமில்லாமல் பீக் ஹவர் இல்லாத நேரங்களில் காலை 5.45 மணி முதல் 8 மணி வரையிலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலும் 50% கட்டண சலுகை பயணம் செய்யலாம். ஒரு நாள் வரமற்ற பயணம் என்ற சலுகை அடிப்படையில் இதில் மொத்தம் ஏழு திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில் கொச்சி மெட்ரோவில் மாணவர்களுக்கு சலுகை வழங்கும் விதமாக புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேருந்தில் எப்பொழுது எப்படி பாஸ் எடுக்கிறோமோ அதேபோல மெட்ரோவிலும் பாஸ் வசதி அமலுக்கு வந்திருக்கிறது. இதற்கு வித்யா 45 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ் மூலமாக மாணவர்கள் 45 நாட்களில் மொத்தம் 50 முதல் பயணம் செய்யலாம். எந்த ஒரு ரயில் நிலையத்திலிருந்தும் வேறொரு ரயில் நிலையத்தை சென்றடையலாம். இதற்கான கட்டணம் 495 ரூபாய். அதாவது ஒரு பயணத்திற்கு வெறும் பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்த திட்டம் 25 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் எங்கு படித்து வருகிறார்கள் அது தொடர்பான  ஐடி கார்டு தேவை.