மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இப்போது வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்களைக் குறிவைத்து பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளது.
குறிப்பாக, கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு நிலையமான ராஸ் லாஃபான் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியதில் அங்குப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கத்தார் மட்டுமின்றி சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கிணறுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஈரானுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கத்தார் மீதான தாக்குதல் தொடர்ந்தால், ஈரானின் ஒட்டுமொத்த எரிவாயு நிலையங்களையும் அமெரிக்கா தரைமட்டமாக்கும் என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்தத் திடீர் ஆக்ரோஷத்தால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், வளைகுடா நாடுகள் ஈரானுக்கு எதிராகப் போர் தொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
