ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் பலியான நிலையில் தாக்குதலுக்கு பதிலடியாக , மே 7 அன்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது.
இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டன. 1971 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை கூட்டாக பாகிஸ்தானுடன் மோதியது இதுவே முதல் முறை. பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் கூறியது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் புதிய வீடியோவை ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்படுவது பதிவாகி உள்ளது.
#NorthernCommand ‘s resolute operations in #OperationSindoor were an exemplar of restraint turning into decisive response. Precision strikes on terror launchpads and the elimination of perpetrators of the #Pahalgam massacre underscore our unwavering pursuit of peace in the… pic.twitter.com/PeUIahQKF6
— NORTHERN COMMAND – INDIAN ARMY (@NorthernComd_IA) September 3, 2025
“>
