விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதில், நமது அன்னை தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றுவேன், ஜாதி, மதம் பாலினத்தின் வேற்றுமைகளை களைந்து மக்களாட்சி மற்றும் மதசார்பின்மை சமூக நீதிப் பாதையில் பயணித்து மக்களுக்கு கடமையாற்றுவேன் உள்ளிட்டு ஐந்து உறுதிமொழிகளை எடுத்தனர். இதனால் விஜய் தமிழ் தேசிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளது உறுதியாகி உள்ளது.