ஈம சடங்கிற்கு வந்த இரண்டு இளைஞர்கள் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஜடையம்பட்டி கிராமத்திற்கு உறவினரின் ஈம சடங்குக்காக முரளிதரன் என்பவரது இளைய மகன் ஜெயராஜ்(22) மற்றும் பாலகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திகேயன் (23) ஆகிய இருவரும் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்று உள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஜெயராஜ் மற்றும் கார்த்திகேயன் இருவரது கால்களும் சேற்றில் சிக்கி ஆற்றில் மூழ்கி மூச்சடைத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.