கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 40,000 பேர் பலியாகியனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்கலாம் என ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது. அதோடு உலக சுகாதார நிறுவனம் இதை 100 வருடங்களில் இல்லாத மாபெரும் பேரிடராக அறிவித்து உள்ளது.

இந்நிலையில் துருக்கி, சிரியாவுக்கு 10,000 நடமாடும் வீடுகள் வழங்குவதாக கத்தார் அறிவித்துள்ளது. அதேபோன்று பாதிப்படைந்த பகுதிகளுக்கு தற்காலிக வீடுகள் அமைத்து கொடுப்பதாக நேட்டோ கூட்டமைப்பு செயலாளர் ஜென்ஸ் கூறியுள்ளார். உருக்குலைந்து கிடக்கும் துருக்கிக்கு பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது.